யேமனில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Monday, May 22nd, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவூதி அரேபியாவுக்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஹெளதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த சனியன்று யேமனில் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், யேமனிய கொடிகளை கைகளில் ஏந்தியும் “அல்லாஹ் ஒருவனே சிறந்தவன்”, “அமெரிக்காவுக்கு அழிவு உண்டாகட்டும்”, “இஸ்ரேல் அழிய வேண்டும்”, “யூதர்கள் சபிக்கப்பட வேண்டும்” மற்றும் “இஸ்லாமிற்கு வெற்றி உண்டாகட்டும்” போன்ற பதாதைகளை கைகளில் ஏந்தியும் ஆர்ப்பரித்துள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “தீவிரவாதம் வேண்டாம் என்பதே எமது விருப்பம். அமெரிக்கா தீவிரவாதத்தை தூண்டுகின்றது. சவூதியின் துணையுடன் யேமனில்  உள்ள மக்களை ட்ரம்ப் கொன்று குவிக்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றுமொருவர், “ட்ரம்பின் கூட்டணியுடன் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யேமன் மக்களை மிகவும் பாதிக்கும். இருப்பினும், எவ்வளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் நாம் தைரியமாக முகங்கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

Related posts: