உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Tuesday, July 14th, 2020

உலக நாடுகள் சில கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்று மேலும், மேலும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. நிறைய நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என்றும் ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. இந்நிலையில், பல அரசுகளின் மற்றும் மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று மேலும் மேலும், மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

Related posts: