யுக்ரைனில் தேசத்துரோகம் – உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி!

Monday, July 18th, 2022

யுக்ரைனின் பாதுகாப்புத்துறையின் இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை நீக்கியுள்ளார்.

அத்துடன் குறித்த துறைகளின் 60 க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் இப்போது யுக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக தேசத்துரோகம் தொடர்பில் 651 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் இவான் பகானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: