மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம் இந்தியாவிடம் இருந்தே அமைதியை எதிர்பார்க்கின்றது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Monday, April 22nd, 2024மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார்.
மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நினைவில்லமாகுகிறது ஜெயலலிதாவின் இல்லம் !
பாடசாலையாக கருதப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து சுமார் 500 பேர் மீட்பு!
எரிவாயு விநியோகம் நிறுத்தம் - ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி!
|
|