பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சட்டத்தில் மாற்றம்!

Friday, March 17th, 2017

பிரித்தானியாவில் விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள் அடுத்த விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள் தொடர்ந்தும் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது குறித்து தற்போது பல கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.

ஆனால் உள்விவகார அமைச்சின் இணையத்தளம் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது “28 நாட்கள் 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது” என்று உள்விவகார அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அண்மையில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட உள்விவகார அமைச்சினுடைய குடிவரவு சட்டவிதிமுறைகளின் பத்தி 39E யிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், விசா முடிவடைவதற்கு முன்னர் பொருத்தமான விண்ணப்பம் ஏன் மேற் கொள்ளப்படவில்லை என்பதற்கு விண்ணப்பதாரி அல்லது விண்ணப்பதாரியின் பிரதிநிதிகளால் தகுந்த காரணம் காட்டப்பட்டால் 14 நாட்களுக்குள் அந்த விண்ணப்பம் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே 28 நாட்கள் என இருந்த விதிமுறை 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதேஒழிய முற்றாக இல்லாமல் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படின் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 10 இலவச ஆலோசனை வழங்கப்படும். நீங்கள் தமிழிலும் உரையாடலாம்.

Related posts: