மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களை திறக்க  அமெரிக்க சட்ட நிபுணர்கள் முயற்சி!

Monday, January 22nd, 2018

மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களை திறந்து நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க சட்ட நிபுணர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

அமெரிக்க அரசு நிர்வாகத்துக்கு பெப்ரவரி 16 வரையிலான செலவுகளுக்கு நிதி அளிப்பதற்கான குறுகிய கால செலவின மசோதா அந்நாட்டு பாராளுமன்றில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எதிர்ப்பு காரணமாக குறித்த இந்த மசோதா தோல்வி அடைந்தது. இதனால் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் உருவாகி 19ம் திகதி நள்ளிரவில் இருந்து அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

இராணுவம், பொலிஸ், தபால் துறை போன்ற, சில அத்தியாவசிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணிக்கு வரலாம் என அரசு அறிவித்துள்ளது. மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். ஆனால் யாருக்கும் சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் எட்டு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் வீட்டில் உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்’ என நிதித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: