எழுபது ஆண்டுகால எல்லைச் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷியா- ஜப்பான் சம்மதம்!

Sunday, September 4th, 2016

வட மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவுகளின் ஏழு தசாப்த கால எல்லைச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான இசைவை ரஷியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ரஷியாவில் தெற்கு குரில் என்று அழைக்கப்படும் ஜப்பானின் வட எல்லை பகுதியில் உள்ள இந்த்த் தீவுகள், இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்டவை.அப்போதிருந்தே இந்த இரு நாடுகளின் ராஜ்ய உறவுகள் இந்தப் பிரச்சனையால் சிக்கல்களை சந்தித்தன.

விளாடிவாஸ்டக்கில் அதிபர் விளாடிமிர் புதினோடு மேடையில் வீற்றிருந்தபோது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்த அசாதாரண சூழ்நிலைக்கு முடிவு காண வேண்டும் என்று தெரிவித்தார்.இதற்கு தீர்க்கமான முயற்சிகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்.

 160506190437_russia_japan_sochi_950x633_getty_nocredit

Related posts: