சுதந்திரம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரண்டு முக்கிய புள்ளிகள் கைது!

Wednesday, October 18th, 2017

கட்டலோனியாவின் சுதந்திரம் தொடர்பில் வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த இரண்டு முக்கிய கட்டலோனிய தலைவர்களை ஸ்பெய்ன் அரசாங்கம் கைது செய்துள்ளது.

ஸ்பெய்ன் அரசின் கீழ் இயங்கி வரும் கட்டலோனியா அண்மையில் தனது சுதந்திரம் தொடர்பான கோரிக்கையை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த முதலாம் திகதி கட்டலோனியாவின் தனி நாடு தொடர்பான வாக்கெடுப்பு ஸ்பெய்ன் அரசின் எதிர்ப்பின் மத்தியில் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த இந்த வாக்கெடுப்பில் 90வீதமான மக்கள் கட்டலோனியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தஇ நிலையில் இது தொடர்பாக இடம் பெற்ற பிரச்சாரங்களின் போதுஇ வன்முறையை தூண்டும் வகையில் பிரிவினையை அதிகரிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக கட்டலோனியாவின் தேசிய மன்றத்தின் தலைவர் மற்றும் கலாச்சார துறையின் தலைவர் மீதும் வழக்குகள் ஸ்பெய்ன் பொலிசாரால் பதியப்பட்டிருந்தன.

Related posts: