டொனால்ட் ட்ரம்ப்பினால் ஆட்டம் காணும் சர்வதேச பொருளாதாரம்!

Wednesday, February 1st, 2017

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் முடிவுகளால் இந்தியாவில் உள்ள தொழில் நுட்பக்கம்பனிகளின் பங்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தெரியவருவதாவது,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்துள்ள விசா கொள்கைகளின்படி, H1B விசாவில் வேலைக்கு வருபவர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,30,000 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இது, முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகம். இன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் H1B விசாவில் திருத்தம் செய்யப்பட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் நிறுவனங்களின் பங்குகள் சுமார் ரூ.48,000 கோடி வீழ்ச்சியடைந்துள்ளன.

இது முன்னர் எப்பொழுதும் இருந்ததை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் லிபியா, துருக்கி உட்பட்ட ஏழு நாட்டவர்களுக்கான விசா வழங்கப்படமாட்டாது என்றும். இது அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டடிருந்தார்.எனினும், உடனடியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர்ப்பிச்சை கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், பொருளாதாரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று ஏனைய நாடுகளும் ட்ரம்பின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புக் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள தொழில் நுட்பக்கம்பனிகளின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுகளானது, ஆசியாவின் ஏனைய வளர்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இது இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் ஏற்படும் மாற்றத்தினால் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்கிறார்கள் அவதானிகள்.

இந்நிலையில், இது குறித்து அமெரிக்காவின் முக்கிய ஆய்வாளர்கள் ஆலோசனை நடத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

trump1 (1)

Related posts: