பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பார்க்க டஸ்க் அழைப்பு!

Friday, September 16th, 2016

ஸ்லோவேக்கியாவில் கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், குறித்த அமைப்பு எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பார்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான டோனால்ட் டஸ்கிடமிருந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது.குடியேறிகள் நெருக்கடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரிட்டனின் முடிவு போன்றவற்றால் ஐரோப்பா ஆடிப் போயுள்ளதாக கூறியிருக்கும் அவர், ஐரோப்பிய மக்களின் நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வென்றெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

பிராடிஸ்லாவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதிநிதித்துவம் இருக்காது.வாக்களார்கள் அவநம்பிக்கையாக உள்ள நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் பிளவுபட்டுக் காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டம் குறியீட்டு அளவில் பெரிதானதாகவும், பலன்கள் அளவில் குறைவானதாகவும் இருக்குமென தோன்றுகிறது.

_91219989_3d3d38cc-f7bc-441a-8ae8-76fa855786a4 (1)

Related posts: