தொடரும் மர்மம்: முற்றுப்புள்ளி வைத்த வடகொரிய அதிபர்!

Saturday, May 2nd, 2020

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் அன் தொடர்பில் பல்வேறு ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், 20 நாட்களின் பின்னர் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பசளை தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில், நாடாவை அவர் வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்காதமை சர்வதேச ரீதியில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது.

இதேநேரம், அவர் கொரோனா வைரஸ் தாக்க அச்சம் காரணமாக, அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பல தினங்களாக அவரின் பிரசன்னம் இல்லாதமை காரணமாக வடகொரிய தலைவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது தொடர்பில் அண்மைக் காலமாக பல்வேறு ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், வடகொரிய அரச ஊடகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், அவர் பொது வெளியில் பிரசன்னமானமை தொடர்பான ஒளிப்படங்கள் எதனையும் அரச ஊடகம் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: