உலகில் அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம்!

Thursday, July 21st, 2016

உலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் குறித்து வெளியாகியுள்ள பட்டியலில் அமெரிக்காவின் பாதுகாப்புதுறை அலுவலகமே அதுவென தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புதுறை அலுவலகத்தில் ஒட்டு மொத்தமாக 32 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவே உலகின் அதிக ஊழியர்கள் கொண்ட துறையாகவும் உள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் உள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 23 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்றாவது இடத்தில் அமெரிக்க பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் உள்ளது. இங்கு 21 லட்சம் ஊழியர்கள் உலகெங்கும் பணிபுரிகின்றனர்.

இதன் அடுத்த இடத்தில் உலகின் மிக அதிக கிளைகள் கொண்ட துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் உள்ளது. இங்கு 19 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 5-வது மிக அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனமாக செயல்பட்டுவருவது பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை மையம். இங்கு 17 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் அடுத்த இடத்தில் 16 லட்சம் ஊழியர்களுடன் சீனாவின் தேசிய பெட்ரோலிய கழகம் உள்ளது. இதன் அடுத்த இடத்தில் உலகின் மிக பெரிய மிந்துறையாக செயல்பட்டுவரும் State Grid Corporation of China உள்ளது. இங்கு 15 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.8-வது இடத்தில் 14 லட்சம் ஊழியர்களுடன் இந்திய ரயில்வே உள்ளது. 9-வது இடத்தில் 13 லட்சம் உறுப்பினர்களுடன் இந்திய ஆயுதப் படை உள்ளது. 10-வது இடத்தில் 12 லட்சம் உறுப்பினர்களுடன் தைவான் நாட்டின் பன்னாட்டு மின்னணு பொருட்களை உற்பத்தி மேற்கொள்ளும் foxconn உள்ளது.

Related posts: