மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
Monday, June 17th, 2024
மேற்கு வங்கத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள ரங்காபாணி என்ற ரயில் நிலையத்தை நோக்கிய பயணித்த, ‘கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்“ (Kanchanjunga Express Train) என்ற பயணிகள் ரயிலானது சிக்னல் கிடைக்காமையினால் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, குறித்த ரயில் நிறுத்தப்பட்டிருந்த அதே தண்டவாளத்தில், வேகமாக வந்த சரக்கு ரயிலொன்று, ‘கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்த நிலையில், பயணிகள் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


