மெதுவாக திரும்பும் இயல்புநிலை!

Monday, June 6th, 2016

பிரான்ஸ் தலைநகரில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட ஆபத்து தணிந்துள்ளதால் நதிக்கு அருகிலுள்ள கிராண்ட் பேலஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பெருகி ஓடிய செயின் நதிக்கு எதிரில் இருக்கின்ற லூவ்ர் மற்றும் ஆர்சே அருங்காட்சியகங்கள் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு அருங்காட்சியகங்களிலும் தரைதளத்திலுள்ள ஓவியப்படைப்புகள் சேதமடையாமல் தடுக்க அவற்றை மேல் தளங்களுக்கு மாற்றியுள்ளனர்.

பாரிஸில் சில மெட்ரோ ரெயில் சேவைகள் இயங்கவில்லை. படகு போக்குவரத்து மற்றும் சில ரெயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

காப்பீடு தொழில்துறை இழப்பீட்டு தொகை வழங்க வகை செய்யும் வகையில் இந்த வாரத்தில் அமைச்சரவை கூடி, ஓர் இயற்கை பேரழிவு என்ற முறையாக பிரகடனம் செய்யும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் தெரிவித்திருக்கிறார்.

Related posts: