மும்பையில் வரலாறு காணாத கடும் மழை – 60 பேர் உயிரிழப்பு!

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணாத கடும் மழை காரணமாக ஒரு நாள் இரவில் மும்பை, தானே, பால்கர் மற்றும் புனேயில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், சாலை, ரயில், விமான போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, மும்பை மலாடு கிழக்கு குரார் பிம்பிரிபாடா பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் உள்ள மலை தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர்.
இடுபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .
ஒரே இரவில் மழைக்கு 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், மராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழதுள்ளந்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
|
|