இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி!

Monday, June 4th, 2018

பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1௲ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 174 ரன்னில் அடங்கியதை அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3௲வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 363 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்களுடன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2௲வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல்௲ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூத்தின் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது

Related posts: