மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5000 ஆக உயர்வு!!

Friday, July 22nd, 2016

மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு 4,000 ரூபாய் நிவாரண உதவியும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்தில் வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு 2,000 ரூபாய் நிவாரண உதவியும் மீனவர்களின் இன்னல்களையும், துயர்களையும் கணிசமாகப் போக்கியுள்ளது. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, இவ்விரு திட்டங்களிலும் வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள், குடும்பம் ஒன்றிற்கு 5,000 ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.

இவை போன்ற நிவாரண உதவித் திட்டங்களைச் செயல்படுத்த, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 223 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆபத்தான கால கட்டங்களில் மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்கான, 48 கோடி ரூபாய் செலவில், 30,000 அவசர காலத் தகவல் அனுப்பும் கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன், 62.14 கோடி ரூபாய் செலவில் தொலைத்தொடர்பு வசதிகளையும், உயர் அதிர்வெண் தொடர்பு சாதனங்களையும், அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Related posts: