பாகிஸ்தான் பொதுத் தேர்தல் – நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி – இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் பலி எனவும் தகவல்!.

Friday, February 9th, 2024

பாகிஸ்தானில் நேற்று வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் பலியாகியும் இருந்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வன்முறைகள் வெடித்ததால் பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி இடையே கடும் போட்டி நிலை ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் ஆரம்பிக்கப்படாதிருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப்பின் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இம்ரான் கானின் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளில் வெற்றி பெற்றுள்ளது.

265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பலூசிஸ்தானில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகிறது. பாக். தலைநகர் இஸ்லாமபாத், கராச்சி, பலூசிஸ்தான் உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

000

Related posts: