பாரிஸில் நடைபெறவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

Saturday, November 26th, 2016

கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்கள் அடுத்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின் பெயரால் உயிரை மாய்த்து கொள்வது மற்றும் வீரமரணத்தை தழுவுவது உட்பட ஐ.எஸ் குழுவினருக்கு விசுவாசம் காட்டும் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவானது இணையத்தில் டஜன் கணக்கான இடங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் ஷாம்ப்ஸ் எலிசீஸ் கிறித்துமஸ் சந்தை மற்றும் பாரீஸ் டிஸ்னிலேண்டும் அடங்கும் என்று ஒரு போலிஸ் வட்டார தகவல் கூறுகிறது.நேற்று காலை ஐந்து சந்தேக நபர்களும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார்கள் என்று மோலின்ஸ் தெரிவித்துள்ளார்

1

Related posts: