மீண்டும் போராடி தோற்றது இலங்கை!
Sunday, January 6th, 2019
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் டெய்லர் 90 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடிய திஸர பெரேரா 140 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பெற்றுக்கொண்டார்.
03 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதிரடி திட்டத்தை அமுல்படுத்திய பிரான்ஸ்..!
நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா கோரிக்கை!
எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு!
|
|
|


