பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதிரடி திட்டத்தை அமுல்படுத்திய பிரான்ஸ்..!

Thursday, February 16th, 2017

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களை சமாளிக்க திறமையான தொழில்நுட்ப உளவாளிகளை வேலைக்கு எடுக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத மற்றும் சைபர் தொடர்பான தாக்குதல்களை சமாளிக்க அந்நாட்டின் உளவுத்துறை சேவை மையம் ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி 2019ம் ஆண்டுக்குள் 600 புதிய உளவாளிகளை பணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருப்பவர்களையும் சேர்த்து மொத்தம் 7000 அதிகார உளவாளிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி மற்றும் இணையத்தை திறமையாக கையாளுபவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், பொறியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இந்த வேலையில் சேர விரும்புகிறவர்கள் பிரெஞ்ச் மொழி மற்றுமில்லாமல் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சம்பளமாக இந்த பணிக்கு €33000லிருந்து €35,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

munich-attack-threat-20160101

Related posts: