மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா!

Monday, December 31st, 2018

பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(30) நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. பங்களாதேஷை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் பிரதமராக ஷேக் ஹசீனா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: