முடங்குகிறது பிரித்தானியா – பொலிசாருக்கு விசேட அதிகாரம்!

Tuesday, March 24th, 2020

இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் தவிர மிகுதி கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடங்கு நிலை மூன்று வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் அத்தியாவசிய பணிகளைச் சேய்வோர் தவிர வேறு யாரும் வீதிகளில் நடமாடமுடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

லண்டனில் தேவை இல்லாமல் வெளியே செல்கின்ற போது பொலிசார் உடனே உங்களுக்கு தண்டப் பணம்(Fine) அறவிடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

Related posts:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக...
பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - வர்த...
எதிர்வரும் செய்வாய்முதல் 20 முதல் 29 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு – யாழ். மாவட்ட செயலகம் அற...