இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அதிபர் எர்துவான்!

Monday, December 12th, 2016

இஸ்தான்புல் கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு வெளியே சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்ட சில காவல்துறையினரின் இறுதிச் சடங்குகளில் துருக்கி அதிபர் ரெசீப் தாயிப் எர்துவான் கலந்துகொண்டார்.

இதை, தரக்குறைவான துரோகச் செயல் என கண்டித்திருக்கும் எர்துவான், இந்த குற்றச் செயலுக்கு அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

பிசிக்டாஸ் விளையாட்டு அரங்கிற்கு வெளியே துருக்கி கொடிகளை அசைத்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் “பிகேகே ஒழிக” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தது.

சட்டத்திற்கு புறம்பான குர்து இன தீவிரவாத குழுவே இந்த கொலைகளுக்கு காரணம் என்று துருக்கி ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த தற்கொலை மற்றும் கார் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 38 பேரில் பெரும்பாலானோர் காவல்துறையினர் ஆவர்.

கோபமாகவும், கவலையுடனும், அரசியல் ரீதியில் பிளவுபட்டும் துருக்கி இந்த ஆண்டை நிறைவு செய்வதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

_92926363_0da5900e-64df-4d29-bf5f-cc3626f58cad

Related posts: