புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் –  பந்துல குணவர்தன

Wednesday, June 21st, 2017

அரசாங்கத்தின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையில் கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள புதிய வரிச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும். இந்த புதிய வரிச் சட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் குறித்த சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அரசாங்கத்திற்கு பிரதானமாக வருமானம் ஈட்டித் தரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுங்கத் திணைக்களம் போன்றவற்றை தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்த முயற்சியின் மற்றுமொரு கட்டமாகவே இந்த அரசாங்கத்தின் உத்தேச புதிய வரிக் சட்டத்தை அறிமுகம் செய்ய முடியும்.ஏற்கனவே புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் வழக்குத் தொடரப்படும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: