97 மீனவர்களை சுட்டுக்கொன்ற ராணுவம்!

Sunday, July 16th, 2017

கமெரூன் நாட்டு எல்லையில் மீன் பிடிக்க சென்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த 97 மீனவர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள Bakassi என்ற தீபகற்ப பகுதியை கடந்த 2008-ம் ஆண்டு கமெரூன் நாட்டிற்கு நைஜீரியா விட்டுக்கொடுத்தது.

முன்னதாக, இந்த தீபகற்பத்தில் நைஜீரியா நாட்டினர் சுதந்திரமாக மீன் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், கமெரூன் நாட்டின் கட்டுப்பாட்டில் Bakassi சென்ற நாள் முதல் இப்பகுதியில் மீன் பிடிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கமெரூன் விதித்தது.

இதனை தொடர்ந்து தீபகற்பத்தில் மீன் பிடிக்க வரும் நைஜீரியா மீனவர்களுக்கு தலா 300 டொலர் கட்டணத்தை கமெரூன் நிர்ணயம் செய்தது.

கமெரூன் நாட்டின் இந்த விதிகளை மீறி கட்டணம் செலுத்தாமல் நைஜீரியா மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் கட்டணம் செலுத்தாமல் மீன் பிடிக்க சென்ற 97 மீனவர்களை கமெரூன் ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளது.

இத்தாக்குதலில் இருந்து தப்பிய சில மீனவர்கள் நைஜீரியா அரசிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், இத்தாக்குதல் தொடர்பாக கமெரூன் அரசு இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாத நிலையில் 97 மீனவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

Related posts: