மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்!

Thursday, March 30th, 2017

வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் இயந்திர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏவுகனை பரிசோதனையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகளை சோதனைகளை பரிசோதித்து வருகின்றது. இது அமெரிக்காவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருக்கின்றது.

இந்நிலையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைச் சோதனை ஒன்றை நடத்தியிருந்த நிலையில், தற்போது ரொக்கெட் இயந்திரம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக திறன்கொண்ட இந்த ரொக்கெட் இயந்திர பரிசோதனையானது, ஏவுகனை சோதனையில் புதியதொரு பரிணாமம் என வடகொரிய ஜனாதிபதி Kim Jong Un தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை வடகொரியாவின் ஆயுத உற்பத்தி முன்னேற்றத்தின் அறிகுறி என தெரிவித்துள்ள அமெரிக்க, கடும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: