சுதந்திரத்திற்காக ஸ்காட்லாந்தில் இரண்டாம் வாக்கெடுப்பு  – நிக்கோலா ஸ்டர்ஜன் !

Monday, July 18th, 2016

ஐக்கிய இராட்சியத்திலிருந்து ஸ்காட்லாந்தின் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் நிலை போதுமான அளவு பாதுகாக்கப்படாமல், பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை தொடங்கினால் இது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ஏனைய பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய போதும், ஸ்காட்லாந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டிலும் இடம் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவதற்கான பேச்சுவார்த்தையை மேற்கோள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

Related posts: