11 விமானங்களின் சேவைகளுக்கு உடனடித் தடை!

Wednesday, March 14th, 2018

மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி 186 பயணிகளுடன் புறப்பட்ட Air Indigo நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக Airbus விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று முற்றிலுமாக செயலிழந்தது.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமானி, அருகாமையில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் தரையிறங்கியது.

இந்நிலையில், அகமதாபாத்தில் 186 பயணிகளுடன் Air Indigo விமானம் அவசரமாக தரையிறங்கியதை தொடர்ந்து இவ்வகை என்ஜின்கள் பொருத்தப்பட்ட Air Indigo நிறுவனத்துக்கு சொந்தமான 08 விமானங்கள் மற்றும் Airgo நிறுவனத்துக்கு சொந்தமான 03 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த A320 Neo ரக விமானத்தில் பிராட் அண்ட் விட்னி என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி நடுவானில் பறக்கும்போது அடிக்கடி என்ஜின்கள் செயலிழப்பதால் பொருத்தப்பட்ட 11 ‘A320 Neo’ ரக விமானங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

முன்னதாக, PW1100 ரக என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என கடந்த மாதம் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது.

Related posts: