ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை – ஓ. பன்னீர்செல்வம்!

Wednesday, February 1st, 2017

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனவும் முதலமைச்சர் .பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இந்த கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும்’ என்று அறிவித்தார்.

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னையில் 21 பேரும், மற்ற மாவட்டங்களில் 15 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், வன்முறையின் போது தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவலர்கள் மீது கூறப்படுவது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவர்கள் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மேலும், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், பாதிக்கப்பட்ட அப்பகுதியில் தற்காலிக மீன் அங்காடி அமைக்கப்படும், வன்முறையால் சேதமடைந்த அங்காடிக்கு மாற்றாக நிரந்தர அங்காடி விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

_93884842_gettyimages-632465046

Related posts: