மியான்மாரில் மண் சரிவில் சிக்கி 12 பேர் பலி
Wednesday, May 25th, 2016
மியான்மாரில் மாணிக்க சுரங்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் சுமார் 50 பேரைக் காணவில்லை.
மியான்மரின் கச்சின் மாகாணப் பகுதியில், விலையுயர்ந்த மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களிலிருந்து நீக்கப்பட்ட மண், மலை போல குவிந்துள்ளது.
அந்த மண் குவியலில் மாணிக்க கல் துண்டுகளை அப்பகுதி மக்கள் தேடி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவில் ஏராளமானோர் புதைந்தனர்.
அன்று இரவு முதல் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மேலும் சுமார் 50 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
|
|
|


