மாலியில் மேலும் 8 மாதங்களுக்கு அவசரகால நிலை  நீட்டிப்பு!

Monday, August 1st, 2016

மாலியின் வடகிழக்கு பகுதியில் வெடித்துள்ள புதிய மோதல்களை தொடர்ந்து, அங்கு அரசாங்கம் பிறப்பித்திருந்த அவசரகால நிலையை 8 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்துள்ளது.

டுவரெக் என்ற போராளி குழுவினருக்கும், அரசு ஆதரவு ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையே கிடல் என்ற நகரம் அருகே இந்த மோதல் நடந்துள்ளது. இந்த இரு தரப்பினரும் ஒரு வாரத்திற்குமுன் கிடல் நகரின் உள்ளே மோதிக் கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம், மாலி தலைநகர் பமாகோவில் இருந்த ஹோட்டல் ஒன்றில் அதிரடியாக நுழைந்த ஜிஹாதிகள் 20 பேரை சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து, மாலியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இது பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டிலிருந்து மாலியின் வடக்கு பகுதியை இஸ்லாமியவாத குழுக்கள் மற்றும் டுவரெக் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததை தொடர்ந்து மாலியில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது.

Related posts: