ஊடகமே அமெரிக்கர்களின் எதிரி சொல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Saturday, February 18th, 2017

ஊடகமே அமெரிக்கர்களின் எதிரி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.மேற்குறித்த கருத்தை அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தியில், “பொய்யான தகவல்களை வழங்கும் ஊடகங்களே அமெரிக்கர்களின் உண்மையான எதிரி” என தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னரே ட்ரம்ப் மேற்குறித்தவாறு டுவிட்டரில் தகவல் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்த ட்ரம்ப், ஊடகங்கள் வெளியிடும் பொய்யான செய்திகளால் பொதுமக்கள் தவறான தகவல்களை உள்வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull), ஊடகங்களை குறைத்து மதிப்பிடுவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

400_13350

Related posts: