மலேசியாவில் போலிஸ் அதிகாரிகளை தாக்க சதி!
Sunday, July 24th, 2016
மலேசியாவில் போலிஸ் அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
நாடு முழுவதும் நடந்த பரவலான சோதனையில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சுமார் ஒரு கிலோ எடை உள்ள குறித்த நேரத்தில் வெடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி முகமது வேன்டியிடம் வெடிகுண்டு தயாரிப்பது குறித்தான உத்தரவுகளை தடுப்புக்காவலில் உள்ள நபர்களில் ஒருவர் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
Related posts:
அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!
வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் தகுதியற்றவர் -ஒபாமா!
இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் - உலக வங்கி!
|
|
|


