மலேசியாவின் விமானத்துக்கு தடை!
Tuesday, June 14th, 2016
மலேசியாவில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் முதல் விமான நிறுவனமான, ரயானி ஏர், விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், ஹலால் உணவை மட்டுமே பரிமாறியது. பயணிகளுக்கு மது தரப்படுவதில்லை. மேலும், விமானப் பணியாளர்கள் அடக்கமாக உடை உடுத்தியிருப்பார்கள். இரண்டு போயிங் 737-400 விமானங்களையும், எட்டு விமானிகளையும், 50 ஊழியர்களையும் வைத்திருந்தது இந்த நிறுவனம்.
லங்காவி என்ற தீவிலிருந்து இயங்கிய இந்த நிறுவனம், தலைநகர் கோலாலம்பூருக்கும், வட பகுதி நகரான கோடா பஹ்ரூவுக்கும் விமானங்களை இயக்கிவந்தது குறிப்பிடத்தக்கது.


Related posts:
ஜெயலலிதா பதவியேபில் மு.க.ஸ்டாலின் ?
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!
|
|
|


