மர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்!

Monday, October 2nd, 2017

மர்ம நோய் தாக்குதலை அடுத்து கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  21 பேரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது.

அமெரிக்காவும், கியூபாவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரி நாடுகளாக இருந்தன.  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் தீவிர முயற்சியின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தது. அதனால் அமெரிக்கா கியூபா இடையே தூதரக உறவு ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டொனால்டு டிரம்ப் அதிபரான பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

கியூபா தலைநகர் ஹவான்னாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு மர்ம நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். காதுவலி, காது கேளாமை, தும்மல், தூக்கமின்மை, தலைவலி, வாந்தி-மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு கியூபாவின் சதியே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதற்கு கியூபா அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிபேரை அதாவது 21 பேரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு பாதிக்கும் என கியூபா கவலை தெரிவித்துள்ளது

Related posts: