அமெரிக்க முதல் பெண்மணி உக்ரைனின் முதல் பெண்மணியுடன் சந்திப்பு!

Monday, May 9th, 2022

மொஸ்கோ மீது மேலும் பொருளாதார தடைகளை வோஷிங்டன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடென் உக்ரைனில் அந்நாட்டு முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை சந்தித்துள்ளார்.

இரண்டு முதல் பெண்மணிகளும் எல்லை நகரமான உஸ்ஹோரோடில் உள்ள ஒரு பாடசாலையில் சந்தித்தனர்.

பெப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் திருமதி ஜெலென்ஸ்கா பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

திருமதி பிடென், “அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களுடன் நிற்கிறார்கள் என்பதைக் காட்ட” விரும்புவதாகக் கூறினார், போர் – இப்போது அதன் மூன்றாவது மாதத்தில் – “மிருகத்தனமானது” மற்றும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சென்றது “தைரியமான செயல்” என்று திருமதி ஜெலென்ஸ்கா கூறினார். அன்னையர் தினத்தன்று உக்ரைனுக்கு வருகை தந்தது மிகவும் அடையாளமாக இருந்தது என்றும் அவர் கூறினார். “இதுபோன்ற முக்கியமான நாளில் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாங்கள் உணர்கிறோம்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு பெண்களும் பின்னர் தற்போது பாடசாலையில் தங்கியுள்ள குழந்தைகளுடன் விளையாடி, உள்ளூர் மாகாணத்தின் சின்னமான டிஷ்யூ பேப்பர் கரடிகளை உருவாக்கினர்.

000

Related posts: