பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு பின்னணியில் உலக அரசியல் – அந்த நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் குற்றச்சாட்டு!

Saturday, June 17th, 2023

பாகிஸ்தானுக்கான கடன் தடைப்பட்டமைக்கு உலக அரசியல் பின்னால் இருப்பதாக அந்த நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையைப் போல பாகிஸ்தான் கடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று உலகளாவிய நிறுவனங்கள் விரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி தொடர்பான செனட்டின் நிலைக்குழு முன் சாட்சியமளித்த இஷாக் டார், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாடு தனது கடமைகளை நிறைவேற்றும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒன்பதாவது மறுஆய்வுக்குப் பின்னர், தேவையற்ற கடன் தாமதத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தால் எந்தக் காரணமும் கூறப்படவில்லை.

எனினும், சர்வதேச நாணய நிதியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் வங்குரோத்து அடையாது என்று இஷார் டார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 6 பில்லியன் உத்தரவாதத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை நியாயமற்றது என்றும், நிதியத்தின் தாமதத் திட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: