சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன் – டுடெர்டே ஒப்புதல்!

Wednesday, December 14th, 2016

டாவோ நகரின் மேயராக இருந்த போது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை,தானே கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபரான ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புக் கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், டுடெர்டே இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

பிலிப்பைன்ஸில் உள்ள பிரத்யேக கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்து முன்னதாக டுடெர்டே ஒப்புக்கொண்டும், மறுத்தும் இருவேறு நிலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

மனிலாவில் தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய டுடெர்டே, போதை மருந்து விற்பவர்களை தான் கொன்றதற்கு காரணம், போதை பொருள் விற்பவர்களுக்கு எதிராக போலீசாரும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க இயலும் என்பதனை அவர்களுக்கு புரிய வைப்பதற்காகக் தான் என்று தெரிவித்தார்.

போதை மருந்துக்கு எதிராகவும், அதனை விற்பவர்களுக்கு எதிராகவும் தான் போர் தொடுக்கவுள்ளதாக வாக்குறுதியளித்து, கடந்த ஜூன் மாதத்தில் டுடெர்டே பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்ற பின்னர், போலீஸார் மற்றும் போதை பொருள் கண்காணிப்புக் குழுக்களால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

_92964036_durete

Related posts: