மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் – அதிமுக இடம் பெறுகிறது?
Sunday, May 22nd, 2016
மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என டெல்லிவட்டாரத் தகவல் கூறுகிறது
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் போது, அதிமுகவும் இடம் பெறும் என கூறப்படுகிறது. அதிமுகவில் உள்ள சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு ராஜ்யசாபாவில் போதிய ஆதரவு இன்மை காரணமாக தடுமாறியது. அப்போது அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இதனால், அதிமுகவுக்கு மத்தியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக அரசு.
இந்த நிலையில், தமிழகத்தில் வெற்றி பெற்ற அதிமுக மத்திய அரசை அனுசரித்து செல்ல முடிவு செய்துள்ளதாம். அவ்வாறு செய்தால், மத்திய அரசின் நிதி அதிக அளவில் கிடைக்கும் என்றும், மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்றால், கட்சியையும், ஆட்சியையும் வளப்படுத்தமுடியும் என முதல்வர் ஜெயலலிதா நம்புவதாக டெல்லி வட்டாரத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, ஜெயலலிதாவின் சிக்னலை எதிர்பாத்து காத்துள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அதிமுக மத்திய அரசில் இடம் பெற்றால், தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்க உள்ளது.
Related posts:
|
|
|


