விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!

Saturday, February 22nd, 2020

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் சீனாவுக்கு செல்லும் பல விமானங்களை ரத்து செய்து உள்ளது.

குறிப்பாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி – ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரை ரத்து செய்திருந்தது. எனினும் 15 ஆம் திகதிக்கு பிறகும் போக்குவரத்து மீண்டும் தொடங்கவில்லை.

இதைப்போல டெல்லி – ஹாங்காங் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் மேற்படி 2 வழித்தடங்களிலும் அமலில் இருக்கும் விமான போக்குவரத்து தடையை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்து உள்ளது.

முன்னதாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற தனியார் விமான நிறுவனங்களும் சீனாவுக்கு விமானங்களை இயக்க தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: