ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் – ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Tuesday, October 5th, 2021

ஜனநாயக அமைப்பின் மூலம் தீர்வுகள் காணப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினருடான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான உடனடிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான குழுக்களை நியமிக்குமாறு நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

சிவில் சமூகத்துடன் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சிவில் சமூகத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் தமிழ் கட்சிகள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து பணியாற்றும் தேவையையும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள் ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுகளுடன் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்களை – இந்த விஜயத்தின் போது மேற்படி பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்திருக்கின்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வு ஒன்றின் தேவை தொடர்பிலும் வலியுறுத்தினர்.

இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கை ஒன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியைப் போன்றே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமற்போனோரது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் காணாமற் போனோருக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதனையும் தான் எடுத்துரைத்துள்ளதாகவும் நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதன் தேவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது நான் தெளிவுபடுத்தியதையும் நான் அவர்களிடம் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை: இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்து தடை!
அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு - 7 தடவைகள் காதில் அறைந்தார் என குற்றச்சாட்டு!
மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய...