அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது!

Friday, November 3rd, 2017

தமது வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றுமாறு வலியுறுத்தி கடந்த 38 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது

இவ்விடயம் தொடரபில் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து கலந்துரையாடல் ஒன்றை இன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கம் அழைப்பை விடுத்திருந்தனர்

இருந்தும் ஈழ மக்கள் ஜனநாயான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் மாகாண அமைச்சர் சரவெஸ்வரன் மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கள் ஆகியோரோ இன்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்

இந்நிலையில் குறித்த மூன்று அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் வேறு வடிவங்களில் அரசிற்று அழுத்தம் வழங்குவதுடன் சட்டரீதியாக இவ்விடயத்தினை எதிர்கொள்வது உள்ளிட்ட சில விடயங்களில் மாணவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிற்கிடையில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டது

இதையடுத்து குறித்த அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பினை நாளையதினம் மாணவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகெண்ட அரசியல் பிரமுகர்களும் இணைந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட கோரப்போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்-

தமது பல்கலைக்கழக நிர்வாக டக்கத்தினையும் சாதகமாக பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக மாணவர்கள் தெரிவித்ததுடன் இன்றைய கலந்துரையாடலில் பங்குபற்றாத அனைத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கம் தமது கணடனத்தையும் வெளியிட்டனர்

Related posts: