மக்காவில் இருந்து 4 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் வந்தவர் கைது!

சவுதி அரேபியாவின் மக்காவில் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை தங்கம் கடத்தி வந்த கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து 814.16g நிறையுடைய தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 4,472,380 ரூபா என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.
மோதிரங்கள் தங்க வளையல்கள் மற்றும் பெண்டன்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்னதெரிவித்துள்ளார்
Related posts:
பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்திற்கு சீனா ஒப்புதல்!
தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா: அரிய புகைப்படங்கள்..............!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை - ஓ. பன்னீர்செல்வம்!
|
|