கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா?

Sunday, September 11th, 2016

அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்துவிடும் திட்டம்ஒன்றை தென்கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் கறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் வழக்கமான ஏவுகணைகள் மூலமும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஷெல் குண்டுகள் மூலமும் பியாங்யாங்கிலுள்ள அனைத்து மாவட்டங்களும் அழிக்கப்படுவதை இந்த திட்டம் விவரிக்கிறது.

வட கொரியா இதுவரை நடத்தியுள்ள அணுகுண்டு சோதனைகளில் மிகவும் சக்தியானதாக கருதப்படும் சோதனை நடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு இந்த திட்டம் வெளியாகியுள்ளது

அணு ஆயுதங்களை செய்வதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை வட கொரியாவின் சமீபத்திய அணுகுண்டு சோதனை ஏற்படுத்தியிருக்கிறது,

160909123618_north_korea_nuclear_test_624x351_reuters

160909142403_north_korea_n_test_2_640x360_afp

Related posts: