எகிப்தின் லக்ஸர் நகரில் வெப்பக் காற்று: பலூன்கள் இயக்கத்தடை விதிப்பு!

Friday, September 2nd, 2016

எகிப்தின் பண்டைய நகரமான லக்ஸர் ஆளுநர், வெப்ப காற்று பலூன்களை இயக்குவதற்குத் தடை விதித்துள்ளார்.

22 சீன சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பலூன் ஒன்று, பலமாக வீசிய காற்றில் பாதை மாறி தரையில் மோதியது.இதில், பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து நடந்து முடிந்து சில மணி நேரங்களில் ஆளுநரின் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கருவிகள் குறித்தான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.லக்ஸர் பள்ளத்தாக்கில்,வெப்ப காற்று பலூன் மிகவும் பிரபலமானது.

கடந்த, 2013ல் பலூன் ஒன்று தீ பிடித்து எரிந்ததில் 19 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போது, பலூன் சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடையானது சமீபத்தில் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

150727145349_balon_udara_640x360_aptn_nocredit

Related posts: