ஜப்பானை நோக்கி ஏவுகணையை ஏவிய வடகொரியா!

Thursday, August 4th, 2016

ஜப்பானின் வடபகுதிக் கரையோரப் பகுதிக்குள், ஏவுகணையொன்றை வடகொரியா ஏவியுள்ளது. இதன் காரணமாக, தனது கோபத்தை ஜப்பான் வெளியிட்டுள்ளதோடு, ஏற்கனவே பதற்றமான அப்பிராந்தியத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

இரண்டு ஏவுகணைகளையே வடகொரியா ஏவியதாக ஐக்கிய அமெரிக்கா முன்னர் தெரிவித்த போதிலும், அதிலொன்று, ஏவப்படும் போதே வெடித்துச் சிதறிவிட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

தென்கொரியாவில், ஏவுகணைக்கெதிரான அமெரிக்காவின் “தாட்” கட்டமைப்பை நிறுவுவதற்கு, நேரடியான எதிர்ப்பு வெளியிடப்படுமென வடகொரியா அண்மையில் எச்சரித்த நிலையிலேயே, இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

தனது வட கரையோரத்துக்கு 250 கிலோமீற்றர்கள் தொலைவில், ஏவுகணையொன்று வீழ்ந்ததாக ஜப்பான் அறிவித்தது. இது, ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலயப் பிரதேசத்துக்கு உள்ளேயாகும்.

“எங்களது நாட்டின் பாதுகாப்பு எதிராக, இது பாரதூரமான ஆபத்தாகும்” என, ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்தார். “இது, மிகவும் தவறான செயற்பாடு என்பதோடு, ஏற்றுக் கொள்ளப்பட முடியாததது” என அவர் மேலும் குறிப்பிட்டார். வடகொரியாவுக்கெதிராக ஐக்கிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் செயற்பாடு இது எனச் சுட்டிக்காட்டிய ஐக்கிய அமெரிக்கா, வடகொரியாவின் சட்டரீதியற்ற செயற்பாடுகளுக்கெதிராகச் செயற்படும் சர்வதேச சமூகத்தின் உறுதியை இது மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவித்தது.

Related posts: