பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் – 11 பொலிசார் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் பொலிசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலரும் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு - லிட்ரோ நிறுவன தலைவர் தெ...
வடகொரியாவில் முதலாவது கொரோனா தொற்றுறுதி - தீவிர அவசரநிலையை அறிவித்தார் வடகொரிய ஜனாதிபதி!
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு தலிபான்கள் அதிரடி உத்தரவு!
|
|
அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் - பெப்பரல் !
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டம் - ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிர்ச்சி ...
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் - திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை...