பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் திடீரென மாயம்!
Friday, April 13th, 2018
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற கெமரூன் நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர்.
குறித்த விடயத்தை கெமரூன் அணியின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியமரும் நோக்கில் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆறு வீரர்களும், இரண்டு வீரங்கனைகளும் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வீரர்கள் குத்துச் சண்டை மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவந்தவர்கள் என அணியின் பிரதானி குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே இவர்களின் விசா காலம் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்களை தேடும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
இலங்கை வான் பரப்புக்குள் இந்திய விமானம்!
பர்கா அணிய சுவிஸ்சர்லாந்தில் தடை!
பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத...
|
|
|


