இலங்கை வான் பரப்புக்குள் இந்திய விமானம்!

Wednesday, August 30th, 2017

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது..

கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிய கப்பல் ஒன்று தென்திசை வழியாக தப்பிச் சென்றிருந்தது.குறித்த கப்பலானது ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட Ksl Ang Yang என்ற கப்பலாக இருக்கலாம் என்று இந்திய கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கப்பலை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கொச்சியில் இருந்து 400 கடல் மைல் தொலைவு என்பதனால், டோனியர் விமானங்களை பயன்படுத்தாது நீண்ட தூர கண்காணிப்பு விமானம் ஒன்று தேடுதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையிலேயே, இந்தியக் கடற்படையின் நீண்ட தூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts: